Tuesday, 21 March 2017

கவிதையாய் விழித்தாள்...!
கவி என்னுள் விதைத்தாள்...!
நாணத்தால் நங்கை முகம் புதைத்தாள்...!
அன்றே என்
ஆண் கர்வம் அழித்தாள்...!

வாழ்க்கை ஒரு வினாத்தாள்...!
அவளே அதற்க்கு விடைத்தாள்...!
வரமாய் எனக்கு கிடைத்தாள்...!
வலிகளை எல்லாம் உடைத்தாள்...!

மழையாய் விழுந்தாள்...!
மண் மனம் நனைத்தாள்...!
மறைவாய் சிரித்தாள்...!
மண் மணம் கொடுத்தாள்...!

கோர்வையாய் கதை பேசும்
பார்வைகள்....! - குளிரிலும்
வேர்வை வரவழைக்கும்
போர்வைகள்...!

பார்த்தேன்...! வேர்த்தேன்...!
குழைந்தேன்...! விழைந்தேன்...!
வழிந்தேன்...! விழுந்தேன்...!

==>
இவன்...
நிலவின் நண்பன்...!

No comments:

Post a Comment